அன்பினால் பிறந்தான்
ஆனந்தமாய் வளர்ந்தான்
இன்பம் மட்டுமே அளித்தனர்
ஈன்றெடுத்த பெற்றோர்....
உள்ளம் விரும்பிய கல்வி
ஊதியம் நிறைந்த வேலை
என எல்லாம் அடைந்து
ஏற்றத்துடன் வாழ்கின்றான்..
ஐம்பொன் சிலையாய் மனம் விரும்பிய மனைவி என
ஒப்பற்ற வாழ்க்கையை கொடுத்தனர் பெற்றோர்..
ஓ ஓ
ஔவை வயதில் பெற்றோர் வாழும்
முதியோர் இல்ல முகவரியை மறந்தானே..
ஃம் இவனை படைத்த இருஉயிர்கள்
இவனுக்காக அங்கு பிராத்தனையில்.....
Saturday, April 11, 2009
உயிர் கொடுத்த உயிர்களின் நிலை...
Posted by Aravind Thiagarajan at 4:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
uyir eluthukalil.......
ore arrputham......reeena84
Post a Comment